குமாரபாளையம் சுள்ளிமலை தோட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திருநங்கை அருந்ததி (52) என்பவரை திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் . நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு அருகில் உள்ள மளிகைக் கடைக்கு குளிர்பானம் வாங்க சென்ற 17 வயது சிறுவனை வீட்டில் உயரத்தில் உள்ள பொருளை எடுத்துத் தருமாறு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த 52 வயதான அருந்ததி என்ற திருநங்கையை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 1098என்ற எண்ணுக்கு பாதிக்கப்பட்ட சிறுவன் தொலைபேசி மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அலுவலர் சவுண்டேஸ்வரி நடத்திய விசாரணை அடிப்படையில் சிறுவனின் தந்தை முருகன் (40) கொடுத்த புகாரின் பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்து 3 r/w 4 போக்சோ ஆக்ட் 2012 ன் கீழ் வழக்கு பதிவு செய்து நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.