பரவோட்டையில் முளைப்பாரி திருவிழா!

பக்தி

Update: 2024-07-24 04:52 GMT
அறந்தாங்கி அருகே பரவாக் கோட்டையில் உள்ள பழமையான காளிகாம்பாள் கோயிலில் ஆடித்தி ருவிழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல் வைபவத்துடன் தொடங் கியது. முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி திருவிழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பா ரியை தலையில் சுமந்து மேளதாளம்முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து ஆற் றங்கரையில் பூஜை செய்து கரைத்து வழிபாடு நடத்தினர். பூஜைகளை வீரமாகாளியம்மன் கோயில் குமார் குருக்கள் நடத்தினார். நாளை (25ம் தேதி) காவடி மற்றும் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கி றது. 26ம் தேதி விடையாற்றியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

Similar News