டி.என் பாளையம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெயிண்டர் தற்கொலை

டி.என் பாளையம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெயிண்டர் தற்கொலை

Update: 2024-11-18 06:53 GMT
டி.என் பாளையம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெயிண்டர் தற்கொலை டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் புஞ்சைதுறையம்பாளையம் அண்ணாநகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 39). பெயிண்டர். இவருக்கும், சித்ரா என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் இதுவரை குழந்தை இல்லை. இதனால் முருகன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் சித்ரா தையல் வேலைக்கு சென்று விட்டார். முருகன் தனியாக இருந்தார். இந்தநிலையில்லும் வேலையை முடித்துவிட்டு சித்ரா இரவு 7 மணி அளவில் காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் சமையல் அறையில் - உள்ள இரும்பு கம்பியில் சேலையால் முருகன் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு முருகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News