எடப்பாடி அருகே வாக்குச்சாவடி மையத்திற்க்கு பிஎல்ஓ வராததால் மக்கள் ஏமாற்றம்...

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி வாக்குச்சாவடி மையத்திற்க்கு பிஎல்ஓ காலை முதல் மதியம் 12.30 வரை பணிக்கு வரவில்லை.

Update: 2024-11-18 03:32 GMT
தமிழகம் முழுவதும் நவம்பர் 16,17. ஆகிய இரு நாட்களாக வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்குதல்  மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்  நடைபெற்று வருகிறது. இந்த முகாமிற்க்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாக்காளர் பெயர் சேர்த்த பெயர் நீக்குதல் முகவரி மாற்றம் பெயர் திருத்தம் ஆகிய மனுக்கள் பெற்று வருகின்றனர்...  அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 325 வாக்கு சாவடிகளிலும் வாக்கு சாவடி நிலையை அலுவலர் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்  எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு சாவடி முகாமில் நான்கு பூத்துகள் அமைக்கப்பட்டு நான்கு நிலைய அலுவலர்கள் செயல்பட்ட வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை முதல் மதியம் வரை வாக்குச்சாவடி பாகம் எண் 140,144 பூத்தில் உள்ள நிலைய அலுவலர்களான எடப்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி  செட்டிங்குறிச்சியில் ஆசிரியராக பணிபுரியும் ராஜா மற்றும் கோவிந்தன் ஆகிய இருவரும் பணிக்கு வரவில்லை இதனால் காலை முதல் வாக்குச்சாவடி முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கத்திடம் கேட்டபோது பணிக்கு வராத வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Similar News