திண்டுக்கல்லில் தொழிலாளியிடம் உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து

பணம் பறிக்கும் முயற்சி செய்த வாலிபர் கைது;

Update: 2025-12-06 02:21 GMT
திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி தீபக்ராஜ் இவர் MVM- கல்லூரி மேம்பாலம் கீழே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செல்லாண்டியம்மன் கோவில் தெரு நாராயணபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் தனசீலன்(22) என்பவர் தான் பெரிய ரவுடி என்று கூறி உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயற்சி செய்ததாக அளித்த புகாரின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் ஜான் பீட்டர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்திற்கு ஈடுபட்ட தனசீலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Similar News