தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

Update: 2024-07-24 09:46 GMT
சமூக வலைத்தளங்கள் மூலம் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை தெரிந்து கொள்ளும் வசதி உள்ளதாக மத்திய மக்கள் தொடர்பக மண்டல இயக்குனர் லீலா மீனாட்சி தெரிவித்தார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் மூலம் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி சேலம் திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். தர்மபுரி கள, விளம்பர அலுவலர் நாத் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மண்டல இயக்குனர் லீலா மீனாட்சி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- மத்திய அரசு சார்பில் ஏழை மக்களுக்கு 26 வகையான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் குறித்த விவரங்களை இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ‘ஸ்கில்' இந்தியா திட்டத்தின் மூலம் படித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறக்கூடிய இணையதள பதிவு, அகில இந்திய அளவிலான பணி வாய்ப்புகள் குறித்த தகவல்களும் மத்திய அரசு இணையதளங்களில் உள்ளன. பிரதமரின் ‘ஸ்வ நிதி' திட்டத்தின் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் கந்து வட்டிக்கொடுமையில் சிக்கியவர்களை முழுமையாக அதில் இருந்து மீட்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News