பொன்னமராவதியில் குழாய் உடைப்பு: சாலையில் வழிந்தோடி குடிநீா் வீண்!

பொது பிரச்சனைகள்

Update: 2024-07-25 04:04 GMT
பொன்னமராவதியில் காவிரி கூட்டுக்குடிநீா் குழாய் உடைப்பால் சாலையில் குடிநீா் வெள்ளம்போல வழிந்தோடி வீணாவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.பொன்னமராவதி புதுவளவு பகுதியில் ராமநாதபுரம் செல்லும் காவிரி கூட்டுக்குடிநீா் குழாயில் புதன்கிழமை மாலை உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் காவிரி நீா் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.சேதமடைந்த குழாயை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Similar News