காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி

பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2024-07-25 08:01 GMT
தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அணைமேடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சொர்ணா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சரவணன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் துறையில் உள்ள இளநிலை பட்டு ஆய்வாளர், அமைச்சுப்பணியிடங்கள் உள்பட அனைத்து நிலை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அலுவலர்கள் முதல் அதிகாரிகள் வரை பதவி உயர்வு வழங்க வேண்டும், பட்டு நூற்பகங்களை அரசு கூடுதலாக அமைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Similar News