தமிழக அளவில் தங்கப்பதக்கம் வென்று நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மாணவி சாதனை

ஆசிரியர்கள் பாராட்டு

Update: 2024-07-26 03:12 GMT
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ.துறையில் 2023-ம் ஆண்டில் பட்டம் பெற்ற மாணவி மைதிலி, 95.4 சதவீதம் மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி தங்கப்பதக்கத்தை வழங்கி கவுரவித்தார். அப்போது பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் உடனிருந்தார். இதே கல்வியாண்டில் எம்.இ., ஐ.எஸ்.இ துறையில் பட்டம் பெற்ற மாணவர்கள் கீர்த்திவாசன், அனிஷ்குமரன் ஆகியோர் தரவரிசை பட்டியலில் 4 மற்றும் 5-வது இடங்களையும், எம்.இ., வி.எல்.எஸ்.ஐ. துறையில் பட்டம் பெற்ற மாணவன் சபரிநாதன் தரவரிசை பட்டியலில் 6-ம் இடத்தையும் பிடித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழக அளவில் சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களை வழிநடத்திய பேராசிரியர்களையும் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர் சீனிவாசன், செயலாளர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார், துணை முதல்வர் விசாகவேல் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். மேலும், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறைத்தலைவர் சரவணன், ஆராய்ச்சி இயக்குனர் சந்தியாகுமாரி உள்பட அனைத்து துறை இயக்குனர்கள், தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களும் மாணவ, மாணவிகளுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Similar News