மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வையப்பமலையில் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வையப்பமலையில் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு அருகே வையப்பமலை மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசு மின்கட்டண உயர்த்தியதை வாபஸ் பெற கோரி தமிழக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சிறு குறு நடுத்தர உள்ளிட்ட அனைத்து தொழில்களும் கடும் நெருக்கடியின் மத்தியில் தொழில் செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் தொடர்ந்து மின் கட்டண உயர்வு ஏறிக்கொண்டே இருப்பதால் வீடுகள் உட்பட கடும் பாதிப்பை உருவாக்கும் புதிய மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். ஒன்றிய அரசு தமிழகத்தில் அமுல்படுத்த உள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மாதாமாதம் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீ.தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேற்கு ஒன்றிய செயலாளர் கே. எஸ்.வெங்கடாசலம்.மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள்.ஒன்றிய குழு உறுப்பினர்கள் பூபதிமுருகன். மோகனப்பிரியா.மோட்டார் சங்க மாவட்ட பெருலாளர் சத்திவேல். உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்