ஜலகாம்பாறை முருகர் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

ஜலகாம்பாறை முருகர் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Update: 2024-07-29 07:50 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை முருகர் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் பிரசித்தி பெற்ற முருகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் ஆடி கிருத்திகையில் ஜலகாம்பரை முருகனுக்கு சிறந்த வழிபாடுகள் நடத்துவது வழக்கம் இந்த நிலையில் ஆடி கிருத்திகையான இன்று முருகருக்கு அலங்காரம் செய்து அபிஷேகங்கள் நடைபெற்றன இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் அழகு குத்தியும் காவடி எடுத்தும் வந்தனர்.மேலும் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர். மேலும் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் ஆடி கிருத்தகையானா இன்று முருகனை தரிசிக்க சுமார் 50,000 ஆயிரத்திற்கும்மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Similar News