டிரினிடி மகளிர் கல்லூரியில் இந்திய அரசியல் சாசன தின கொண்டாட்டம்
By : King 24x7 Angel
Update: 2024-11-26 08:58 GMT
டிரினிடி மகளிர் கல்லூரி
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சம வாய்ப்பு மன்றம், உன்னத் பாரத் அபியான் அமைப்பு மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட அமைப்பு ஆகியவற்றின் சார்பில் 'இந்திய அரசியல் சாசன தினம்' இன்று (26/11/2024) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் இக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை எஸ் ஜெயமதி பேசினார். இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழு தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது என்றும், இந்நாளின் முக்கியத்துவம் குறித்தும் இந்நிகழ்வில் எடுத்து உரைத்தார். நிகழ்வில் பங்கேற்றவர்கள் இந்திய சாசன தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை ஆர் ஏ அனிதா நன்றி கூறினார்.