சங்கரன்கோவிலில் பெண் போலீஸ் உள்ளிட்ட நான்கு பெண்கள் கைது
பெண் போலீஸ் உள்ளிட்ட நான்கு பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலில் மாதம் தோறும் உண்டியல் காணிக்கை என்னும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் காணிக்கை என்னும் பணியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த சேர்ந்த பக்தர்களும் தன் ஆர்வலர்களும் வருவது வழக்கம். நேற்று காலையில் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் பெண்களில் சிலர் பணத்தை திருடியதாக அருகில் இருந்த பெண்கள் கோவில் அதிகாரியிடம் தகவல் கொடுத்தனர். கோவில் அதிகாரிகள் விரைந்து சென்று தீவிரமாக கண்காணித்த போது தூத்துக்குடி தென்பகுதி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் மகேஸ்வரி மற்றும் அவர்களிடம் வந்த மூன்று பெண்களும் பணத்தை தங்களது ஆடைக்குள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் நான்கு பேரையும் கோவிலில் பணியில் இருந்த போலீசார் கோவில் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் திருக்கோவில் நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் கான்ஸ்டபிள் உள்ளிட்ட நான்கு பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கோவில் செலுத்திய பக்தர்கள் காணிக்கை பணத்தை எண்ணுவதாக கூறி பெண் போலீசார் உடன் சேர்ந்து மூன்று பெண்கள் பணத்தை திருடிய சம்பவம் குறித்து சங்கரன்கோவிலில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.