75வது அரசியலமைப்பு சட்ட தினம் முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றார்

Update: 2024-11-26 06:31 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு 75 ஆவது அரசியலமைப்பு சட்ட தினம் முன்னிட்டு திமுக வழக்கறிஞர் அணி சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு வழக்கறிஞர்களுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல் அமீது, மூத்த வழக்கறிஞர் கலைச்செல்வன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Similar News