ஜோலார்பேட்டையில் மூதாட்டி இறந்து விட்டதாக சான்று பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருக்கும் பல கோடி ரூபாய் சொத்தை அடைய உயிரோடு இருக்கும் மூதாட்டி இறந்து விட்டதாக சான்று பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-29 08:08 GMT
திருப்பத்தூர் மாவட்டம் சென்னையில் இருக்கும் பல கோடி ரூபாய் சொத்தை அடைய உயிரோடு இருக்கும் மூதாட்டி இறந்து விட்டதாக சான்று பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியை சேர்ந்த லீலாவதி (85) என்பவருக்கு இரண்டு மகள், இரண்டு மகன்கள் என மொத்தம் 4 பிள்ளைகள் இருந்த நிலையில் அவரது மூத்த மகள் சாந்தி என்பவர் ஜோலார்பேட்டையில் வசித்து வந்த ஆந்திர மாநிலம், வக்காலா பகுதியை சேர்ந்த பாபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களது காதலை அவரது பெற்றோர்கள் ஏற்று கொள்ளாத நிலையில் அவர்கள் பிழைப்பு தேடி சென்னை சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு பெண்கள் விடுதியில் சாந்தி காப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார். இவர்களுக்கு கிஷோர்குமார் என்ற மகன் பிறந்த பிறகு சில ஆண்டுகளில் அந்த ஹாஸ்டல் உரிமையாளர் விடுதியை நடத்த முடியாமல் மூடி உள்ளார். அப்போது சாந்தியின் தாயிடம் முறையிட்டு அவரிடம் இருந்து பணத்தை பெற்று அதே விடுதியை சாந்தி பெண்கள் விடுதி என்று பெயர் வைத்து சென்னை கோடம்பாக்கம், மகாலிங்கபுரத்தில் நடத்தி வந்துள்ளார். அதனை தொடர்ந்து ஒரு ஹாஸ்டல் பல ஹாஸ்டலாக மாறும் பொழுது ஆட்கள் தேவை இருந்த நிலையில் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கிரிராஜ் என்பவரை மேனேஜராக சாந்தி வேலைக்கு சேர்த்துள்ளார். எங்கு போனாலும் இவர்கள் இருவரும் ஒன்றாக சென்று வரும் போது கிரிராஜ் சாந்தியுடன் கள்ளதொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த சாந்தியின் கணவர் பாபு அவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் பாக்காலா என்ற ஊருக்கே திரும்பி சென்றுள்ளார். அவரது மகன் கிஷோரை விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்து வந்துள்ளனர். இதனை எல்லாம் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மேனேஜர் கிரிராஜ் சாந்தியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாக சான்று முதல் அனைத்தும் தயார் செய்து வைத்து இருந்துள்ளார். கிரிராஜ் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவர்களுக்கு அவருக்கும் ஒரு மகன் உள்ள நிலையில் அவரவர்கள் ஆங்காங்கே வசித்து வந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி இறந்த நிலையில் கிரிராஜ் என்பவர் சாந்தி பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களையும் தன் வச படுத்தியுள்ளார். அதற்கு வாரிசு சான்றுகள் முக்கிய ஆவணங்கள் தேவைப்பட்ட காரணத்தினால் சாந்தியின் தாயார் லீலாவதி என்ற மூதாட்டியை இறந்து விட்டதாக கூறி அவருக்கு இறப்பு சான்றும் பெற்று சுமார் 20 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்துக் கொண்டுள்ளார். அதேபோன்று கிஷோர் குமார் அவரது மனைவியுடன் வாழ்ந்த வீட்டையும் விட்டு வைக்காமல் அந்த வீட்டையும் அடிதடி நடத்தி அத்துமீறி அபகரித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிஷோர் சென்னையில் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடைசியாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த லீலாவதி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று தலைமைச் செயலாளருக்கு கிஷோர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அதன் பேரில் இது மோசடி என்பதால் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். அதன் பேரில் கிஷோர் தனது உயிருடன் இருக்கும் பாட்டியுடன் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருடன் இருக்கும் பாட்டிக்கு இறப்புச் சான்று பெற்ற கிரிராஜ் மற்றும் அவரது மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். சொத்துக்காக உயிருடன் இருக்கும் மூதாட்டியை இறந்து விட்டதாக சான்று பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News