திமிரியில் உள்ள குமரகிரி மலையில் காவடி செலுத்தி பக்தர்கள் சாமி தேசம்

காவடி

Update: 2024-07-29 16:10 GMT
திமிரியில் உள்ள குமரகிரி அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பம் குடும்பமாக காவடியை தோளில் பக்தி பாடல்களை பாடி நடனம் ஆடி நடைபயணமாக ஆலயத்திற்கு வருகை தந்து பாலமுருகனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாட்டில் ஈடுபட்டு அருளாசி பெற்றனர் முன்னதாக சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது ஆடி கிருத்திகையை முன்னிட்டு உள் மாவட்ட மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதல் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டினை மேற்கொண்டனர் பக்தர்களின் நலன் கருதி மருத்துவக் குழுவினர் தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் உள்ளிட்டவைகள் கோவில் நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டது.

Similar News