அமைச்சர் மதிவேந்தன், மதி இழந்த அமைச்சர் போல பேசியிருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி

Update: 2024-07-30 06:14 GMT
அமைச்சர் மதிவேந்தன், மதி இழந்த அமைச்சர் போல பேசியிருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது - வனப்பகுதிகளில் சாலையை அகலபடுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி: உசிலம்பட்டி. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, விக்கிரமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட கோவில்பட்டி முதல் பாண்டியன் நகர் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வனப் பகுதியில் உள்ள சாலையை அகல படுத்த வேண்டும் என, இரு தினங்களுக்கு முன்பு சோழவந்தான் தொகுதிக்கு வந்த வனத் துறை அமைச்சர் மதிவேந்தனிடம், பொதுமக்கள் மற்றும் திமுகவினர் வைத்த கோரிக்கைக்கு அந்த தொகுதி அதிமுக எம்எல்ஏ தொகுதி, அதிமுக எம்எல்ஏ-வை நேரில் வந்து பார்க்க சொல்லுங்கள் என கூறியது சர்ச்சையான சூழலில், இன்று உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் இந்த பகுதியை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தி யாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன். இந்த சாலையை அகல படுத்த வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. சாலையை அகல படுத்த பலமுறை வனத் துறையிடமும், சட்டமன்றத்திலும், மாவட்ட ஆட்சியர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் கோரிக்கையாக வைத்துள்ளேன். பலமுறை கோரிக்கை வைத்தும், இன்னும் இந்த சாலையை அகல படுத்த முடியவில்லை, இன்று இந்த பகுதியை ஆய்வு செய்த பின் மீண்டும் முதல்வரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுக்க உள்ளேன். இரு தினங் களுக்கு முன்பு சோழவந்தான் தொகுதிக்கு வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தேனிடம் திமுகவினர் தான் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், பொது மக்களின் கோரிக் கையையும், திமுகவினரின் கோரிக் கையையும் நிராகரித்து, விட்டு சென்றிருக்கிறார். அமைச்சர், தமிழ்நாடு முழுவதுமாக அமைச்சர் தான். அண்ணா அறிவாலயத்திற்கு மட்டும் அமைச்சர் இல்லை, உசிலம்பட்டி பகுதிக்கு அமைச்சர்கள் ஆய்வு செய்ய வரும் போது எம்எல்ஏ - வாகிய எனக்கு தகவல் கொடுத் துள்ளனர். ஆனால், இந்த வனத் துறை அமைச்சர் ஆய்வு செய்ய வரும் போது எனக்கு தகவல் சொல்லவில்லை, அப்படி தகவல் தெரிவித்து இருந்தால் நேரில் சந்தித்து மக்களின் கோரிக் கைகளை தெரிவித்து இருப்பேன். என்னை நேரில் வந்து பார்க்க வேண்டும் என சொல்லும் வனத்துறை அமைச்சர், நான் சட்டமன்றத்தில் ஏற்கனவே மளளப்புரம் மயிலாடும்பாறை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கோரிக்கை வைத்த ஆவணங்கள் உள்ளன. எல்லா கோரிக்கையும் நிறைவேற்றும் வனத்துறை அமைச்சர் இப்பகுதிக்கு ஆய்வு செய்ய வந்த போது அருகில் உள்ள மள்ளப்புரம் - மயிலாடுதுறை சாலையையும் ஆய்வு செய்திருக்கலாம். அதை விடுத்து அதிமுக எம்எல்ஏ-விடம் கோரிக்கை வையுங்கள் என, சொல் லியிருப்பது எந்த அடிப்படையில் கூறியுள்ளார் என, தெரியவில்லை, தமிழ்நாடு முழுமைக்கும் உள்ள அமைச்சர் தவறாக பேசியிருப்பது மக்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளது. அண்ணா அறிவால யத்திற்கு மட்டும் அமைச்சர் என்றால், மதிவேந்தன் அமைச்சர் என்பதா, மதி இழந்த அமைச்சர் என்பதா என தெரியவில்லை. 110 விதியின் கீழ் கொடுத்த மள்ளப்புரம் - மயிலாடும்பாறை சாலையை விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இந்த விக்கிரமங்கலம் கோவில்பட்டி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, தெரி வித் துக் கொள் கிறேன் என, பேட்டியளித்தார்.,

Similar News