புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி திருச்செங்கோடு ஒன்றியத்தில் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மா. முருகன், வட்டார கல்வி அலுவலர் வ. அருள் ஆகியோர் முன்னிலையில் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ) கா. சந்திரசேகர் தலைமையில் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் ப. சரவணன், இரா. ரேவதி, க. ஷமீனாபானு,கோ. உதயபானு மற்றும் மூ. மகேஸ்வரி ஆகியோரால் பயிற்சி வழங்கப்பட்டது. 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு,எண்ணறிவு வாழ்வியல் திறன்கள் கற்பிக்கும் பொருட்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.