கேரளா தமிழக எல்லையில் வாழும் தமிழர்களுக்கு உதவ எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை
கேரளா தமிழக எல்லையில் வாழும் தமிழர்களுக்கு உதவ எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வயநாடு பகுதியில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போய் உள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது. இந்த வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கி கேரள அரசுக்கு உதவ வேண்டுமென்று இந்நேரத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக கோரிக்கை வைத்து கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவர்கள் விரைவாக குணமடைய வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். கேரள, தமிழ்நாடு எல்லையில் வாழுகின்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முடிந்த உதவிகளை செய்ய வேண்டுகிறேன் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்