வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் ஆய்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி பாதிக்கப்பட்ட குடியிருப்பு வசதிக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை .

Update: 2024-07-31 12:32 GMT
காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் மேட்டூர் அணையும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை தொடர்ந்து தற்பொழுது அணைக்கு வரும் நீரானது அப்படியே காவிரியில் 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி காவிரியில் 1 லட்சத்து 3ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளதால், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியான கலைமகள் வீதி மற்றும் மணிமேகலை வீதிகளில் அண்ணா நகர் உள்ளிட்ட வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு, ஏற்கனவே தயார் நிலையில் உள்ள முகாம்களில் தங்க பொது மக்களை அறிவுறுத்தினர். இதை அடுத்து பொதுமக்கள் தாங்களாக முன்வந்து முகாம்களில் தங்கி வருகின்றனர். இதில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் நகராட்சி திருமணம் மண்டபம் மற்றும் 2 தனியார் திருமண மண்டபங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வருவாய்த் துறையினர் நகராட்சி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பான முகாம் பகுதிகளில் தங்க வேண்டும் என ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முகாம்களில் தங்கும் பொது மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இது போல் வெள்ளப்பெருக்கு வரும் காலங்களில் தற்காலிகமாக முகாம்களை அமைத்து காப்பாற்றுவது விட தமிழக அரசு உடனடியாக வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய காவிரி கரையோர பகுதிகளில் தடுப்பு சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இத எடுத்து இன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி பார்வையிட்டதுடன் முகாம்களில் தங்கி இருந்த பொதுவாக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார் இதனை அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து பொதுமக்களுக்கு தற்காலிக முகாம்கள் மூலம் தீர்வு காண முடியாது அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

Similar News