எடப்பாடி நகரப் பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை
சேலம் மாவட்டம் எடப்பாடி நகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று கடைகளில் 10 கிலோ ஹான்ஸ் பிடிபட்டது.
எடப்பாடி நகர பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 30ற்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து தற்காலிகமாக மூன்று கடைகளை பூட்டி வணிகம் விற்பனை செய்ய தடை செய்து தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் 75 ஆயிரம் அபராதம் விதித்த இச்சம்பவத்தால் அப்பகுதிகளில் பரபரப்பு.... நவ 27,சேலம் மாவட்டம் எடப்பாடி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் ஹான்ஸ் , கூலிப் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக வந்த தகவலையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் எடப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பு பழனி தலைமையில், சுகாதாரத்துறை, நகராட்சி துறை, காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கடைவீதி, கலையரங்கம் தியேட்டர், பேருந்து நிலையம், கவுண்டம்பட்டி, நைனாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கவுண்டம்பட்டி மற்றும் நைனாம்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வந்த மூன்று கடைகளில் ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட 10 கிலோ 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்து அந்த மூன்று கடைகளையும் பூட்டி தற்காலிகமாக வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதில் தலா 25 ஆயிரம் விதம் என மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். இதனால் எடப்பாடி நகர பகுதிகளில் செயல்பட்டு வந்த கடைக்காரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.