ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
14 அம்ச கோரிக்கையிலே நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 14 அம்சம் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட துணை தலைவர் சிவனு பூவன் தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் முருகேசன் இணைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சோமசுந்தரம் கோரிக்கையை வலியுறுத்து கண்டன ஆர்ப்பாட்ட உரையாற்றினார் ஓய்வு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகார் மனுக்களின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை புகாரை விரைவாக முடிக்க வேண்டும் தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை கைவிட பட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்