லாலாபேட்டையில் அகில இந்திய விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்;

Update: 2025-12-19 09:50 GMT
லாலாபேட்டையில் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி அந்தத் திட்டத்தை நிறுத்த நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் லாலாபேட்டை தபால் நிலையம் முன்பு 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றி அந்தத் திட்டத்தை அடியோடு நிறுத்த நினைக்கும் ஒன்றிய அரசினை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் கண்ணதாசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் தர்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமானது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2006 ஆம் ஆண்டு கிராமப்புறங்களில் ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும். ஆனால் ஒன்றிய பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதியினை ஒதுக்கீடு செய்வதை குறைத்துக் கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரினை ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது. ஒன்றிய அரசு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை பெயரினை மாற்றி அந்தத் திட்டத்தை கைவிடும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும், இதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனக்கூறி ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷனங்களையும் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசெல்வம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

Similar News