கள்ளக்குறிச்சி:டிச,21"SI தேர்வு...
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு! *காவல் சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு தொடர்பான மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பத்திரிக்கை செய்தி நாள்: 19.12.2025* தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 2025-ஆம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்கு தேர்வு;
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 2025-ஆம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு வருகின்ற 21.12.2025 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கீழ்க்கண்ட 2 தேர்வு மையங்களில் 1924 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 595 பெண் விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 2519 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். i. AKT Educational Institution (Matric Higher Sec. School) Main Block Neelamangalam Kallakurichi - 606 213. (For Men Candidate) ii. AKT Educational Institution (St.Thomes Block) & (EMR Block) AKT Nagar Neelamangalam Kallakurichi - 606 213. (For Women Candidate) தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு: தேர்வாளர்கள் காலை 09.30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை முதன்மை எழுத்து தேர்வு நடைபெறும். பிற்பகல் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ்மொழி தகுதி தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தேர்வு அழைப்பாணை (Hall Ticket), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், etc., போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை (Original ID Proof) மட்டுமே கொண்டு வரவேண்டும். நகல்கள் (Xerox) அனுமதிக்கப்படமாட்டாது. தேர்வாளர்கள் கருப்பு நிற பந்து முனை பேனா (Black Ballpoint Pen) மட்டுமே கொண்டு வரவேண்டும். தேர்வாளர்கள் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், ப்ளுடூத் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டுவர அனுமதி கிடையாது. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்து தேர்வு முடித்தவுடன் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது. பிற்பகல் நடைபெறும் தமிழ்மொழி தகுதி தேர்வு முடிந்த பிறகுதான் தேர்வு மையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேர்வாளர்கள் தேர்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவகத்தில் (Paid Canteen) பணம் மட்டுமே (Only Cash) செலுத்தி உணவு மற்றும் திண்பண்டங்கள் பெற்றுக்கொள்ளலாம். (G-Pay, Phone-Pe, Paytm, etc., போன்ற Online பணப்பரிவர்த்தனைக்கு அனுமதி இல்லை). கள்ளக்குறிச்சி பேருந்துநிலையத்தில் இருந்து தேர்வு மையமான AKT Educational Institution-க்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் 21.12.2025 காலை 06.00 மணி முதல் இயக்கப்படும்.