மருமகளையே கற்பழித்த மாமனார் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே மருமகளையே கற்பழித்த மாமனார்.

Update: 2024-11-27 15:57 GMT
கொங்கணாபுரம் அருகே மகள் வயதில் உள்ள தனது மருமகளை, பலவந்தப்படுத்தி கற்பழித்த கொடூர காம புத்தி கொண்ட மாமனாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்... சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜி (65) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் தனது மனைவியுடன் அதே பகுதியில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார்... இந்நிலையில் திருச்செங்கோடு பகுதியில் தனியார் கூரியர் நிறுவனம் நடத்தி வரும் இவரது மகனும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ராஜுவின் மருமகள் (24) கடந்த இரு தினங்களுக்கு முன் தனது குடும்ப அட்டைக்கு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக வெட்டுக்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார்... அப்போது அவரது மாமனார் "உனது முகத்தைப் பார்த்தால் உனக்கு பேய் பிடித்து இருக்கிறது என்று நினைக்கிறேன் வா அருகில் உள்ள கோவிலுக்கு பேய் ஓட்ட போகலாம்" என கூறி அந்த பெண்ணை நேற்று முன்தினம் (திங்கள் அன்று) இரவு அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நள்ளிரவு வரை அந்த பெண்ணிற்கு பல பூஜைகள் செய்த நிலையில் வீடு திரும்பிய அந்த பெண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் அந்த பெண் தூங்கும் அறைக்கு வந்த அவரது மாமனார் தூக்க கலக்கத்தில் இருந்த அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் தனது மாமியார் மற்றும் கணவரிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமையை குறித்து சொல்லி அழுத நிலையில் அவர் தனது கணவருடன் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்...  பெண்ணின் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சம்பந்தப்பட்ட விவசாய கூலித் தொழிலாளி தனது மருமகளை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து தனது மகள் வயது உடைய மருமகளின் கற்பை சூறையாடிய அந்த காமக் கொடூரனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News