தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் செயல்படுத்த திட்டம்.

தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் செயல்படுத்த திட்டம்.;

Update: 2025-12-18 11:43 GMT
தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் செயல்படுத்த திட்டம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் விடுதி கூட்ட அரங்கில் ஜவுளி துறையின் சார்பாக தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளிகளின் வளர்ச்சிக்கான தமிழ்நாடு தொழில் நுட்ப ஜவுளி இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2025 -26 ஆம் ஆண்டு முதல் 2030-31 ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 15 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. தொழில்நுட்ப ஜவுளிகளின் முதலீட்டு வாய்ப்புகள், வளர்ந்து வரும் தயாரிப்பு வகைகள் மற்றும் தொழில்நுட்பம் முன்னேற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று தமிழ்நாடு அரசின் துணி நூல்துறை சார்பில் தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. தேசிய அளவில் புகழ்பெற்ற முன்னணி நிபுணர்கள் ஆலோசனை வழங்கினார்கள். மேலும் ஆலோசகர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் இடையே நேரடி கலந்துரையாடல் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு திட்டம் சார்ந்த சந்தேகங்களுக்கு தெளிவான வழிகாட்டல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். மேலும்,தொழில்நுட்ப துணி நூல் துறை துணை இயக்குனர் மற்றும் துணை திட்ட இயக்குனர் சக்தி விஜயலட்சுமி, துணி நூல் துறை இணை இயக்குனர் மற்றும் இணை திட்ட இயக்குனர் ராகவன், அட்லஸ் குடும்பத்தின் தலைவர் நாச்சிமுத்து, கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தொடர்புடைய அரசுத்துறை அதிகாரிகள் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Similar News