அடிப்படை வசதி கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அடிப்படை வசதி கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை அதிகாரிகள் பேச்சுவார்த்தை;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில் இன்று பொதுமக்கள் திரளாக கூடி சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி நகராட்சி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்… இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்தந்த வார்டுகளின் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி பொறியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.