கரூர் மாவட்டத்தில் 28000 பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 45 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பெருமிதம்.
கரூர் மாவட்டத்தில் 28000 பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 45 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பெருமிதம்.;
கரூர் மாவட்டத்தில் 28000 பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 45 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பெருமிதம். கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சிக்குட்பட்ட புகழிமலை பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பொது மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, புகலூர் நகராட்சி தலைவர் குணசேகர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி புகழிமலை பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 414 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி,புகழிமலை பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இரண்டு தலைமுறைகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பட்டா கிடைக்குமா கிடைக்காதா என தவித்துக் கொண்டிருந்த வேளையில் அவர்களது கோரிக்கைகளை ஏற்று இன்று 414 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், கரூர் மாவட்டத்தில் மொத்தம் 28 ஆயிரம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது 45 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும், இன்னும் விடுபட்டவர்கள் இருந்தால் அவர்கள் வழங்கும் மனுக்களை பரிசீலித்து தகுதி படைத்தோருக்கு பட்டா வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.