அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

தரவரிசையில் இடம் பிடித்த 14 மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன

Update: 2024-07-31 13:40 GMT
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளான மதுரை திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் பொறியியல் கல்லூரிகளின் 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்டம் வழங்கும் விழா மதுரை கீழக்குயில்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் நடைபெற்றது. மதுரை மண்டல வளாக கல்லூரி புலமுதன்மையர் லிங்கதுரை ஆண்டறிக்கை வாசித்தார்.அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி சிவராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் இயக்குனர் ஹரிஹரன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவல சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் தரவரிசையில் இடம் பிடித்த 14 மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்

Similar News