செங்காட்டனூர் பிரிவு சைக்கிளில் சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி உயிரிழப்பு.
செங்காட்டனூர் பிரிவு சைக்கிளில் சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
செங்காட்டனூர் பிரிவு சைக்கிளில் சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புஞ்சை புகலூர், சாலை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் வயது 70. இவர் ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 6 மணி அளவில், கரூர்- சேலம் சாலையில் அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் செங்காட்டனூர் பிரிவு எதிரே சென்று கொண்டிருந்தபோது, கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி, கிழக்கு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த முருகேசன் வயது 61 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், செல்வராஜ் ஓட்டி சென்ற சைக்கிளின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறி சைக்கிள் உடன் கீழே விழுந்த செல்வராஜுக்கு பின்னம் தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் செல்வராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த செல்வராஜின் மகன் ரமேஷ் பிரபு வயது 39 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை கொண்ட காவல் துறையினர், உயிரிழந்த செல்வராஜின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய முருகேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.