அனுமதி இன்றி பிளக்ஸ் பேனரை நிறுவிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி மீது வழக்கு பதிவு.
அனுமதி இன்றி பிளக்ஸ் பேனரை நிறுவிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி மீது வழக்கு பதிவு.
அனுமதி இன்றி பிளக்ஸ் பேனரை நிறுவிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி மீது வழக்கு பதிவு. சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219 ஆவது நினைவு தினம் இன்று. நினைவு தினத்தில் அவரது நினைவு போற்றும் வகையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி கரூர் பேருந்து நிலையம் நுழைவாயிலில் ஆகஸ்ட் 2-ம் தேதி மதியம் 3 மணி அளவில் பிளக்ஸ் பேனரை நிறுவியுள்ளார். அவ்வாறு நிறுவிய பிளக்ஸ் பேனருக்கு முறையாக காவல் துறையில் அனுமதி பெறவில்லை. இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் அளித்த புகாரின் பேரில், அனுமதி இன்றி பிளக்ஸ் பேனரை நிறுவிய மாவட்ட செயலாளர் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.