கரூர் மாவட்டத்தில் டாடா நிறுவனம் காற்றாலை அமைக்க திட்டம்.

கரூர் மாவட்டத்தில் டாடா நிறுவனம் காற்றாலை அமைக்க திட்டம்.

Update: 2024-08-04 07:58 GMT
கரூர் மாவட்டத்தில் டாடா நிறுவனம் காற்றாலை அமைக்க திட்டம். மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சூரிய சக்தி மற்றும் காற்றாலையை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தில் இத்தகைய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க சாதகமான சூழல் உள்ளதால், பல மாவட்டங்களில் ஏற்கனவே காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா பவர் நிறுவனம், கரூர் மாவட்டத்தில் 198 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளை துவக்கி உள்ளது . ஒரு மெகாவாட் திறனில் காற்றாலை, சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க தலா 5- ஏக்கர் நிலம் தேவைப்படும். ஒரு மெகாவாட் திறனில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க 4.50- கோடி ரூபாயும், காற்றாலைக்கு 7- கோடி ரூபாயும் முதலீடாக தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News