சுக்காலியூர் அருகே மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட கடன். கணவனை காணவில்லை. மனைவி புகார்.

சுக்காலியூர் அருகே மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட கடன். கணவனை காணவில்லை. மனைவி புகார்.

Update: 2024-08-04 10:22 GMT
சுக்காலியூர் அருகே மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட கடன். கணவனை காணவில்லை. மனைவி புகார். கரூர் மாவட்டம், சுக்காலியூர் அருகே உள்ள மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜிவ் வயது 38. இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு அண்மைக்காலமாக அதிகப்படியான மது பழக்கமும் உள்ளது. போதிய வருவாய் இல்லாத சூழலில் அதிகப்படியாக கடன் வாங்கி மது அருந்துள்ளார். கடன் வாங்கிய இடத்தில் திருப்பி செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஆகஸ்ட் 2-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜீவ்-ஐ காணவில்லை. வழக்கமாக அவர் செல்லும் இடங்களிலும், அவரது நண்பர்களிடத்தும், உறவினர்களிடத்தும் விசாரித்துப் பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால், ராஜீவின் மனைவி சுகுணா வயது 35 என்பவர், தனது கணவனை காணவில்லை என புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து மாயமான ராஜீவ்-ஐ தேடி வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

Similar News