இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார்
சாலை விதிகளை மீறி செயல்பட்ட இளைஞர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்
ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 நாளில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை மற்றும் கொல்லிமலையை ஆண்ட வல் வில் ஓரி மன்னனின் அரசு விழா நிகழ்ச்சியும், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அன்று வல்வில் ஓரி அரசு விழாவை முன்னிட்டு, பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை நான்கு ரோடு பகுதியில் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் வல்வில் ஓரி மன்னனின் திருவருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பிறகு வாகனங்களை முறுக்கிய படியே இளைஞர்கள் அட்ராசிட்டி செய்தபடியே இருந்தனர். மேலும் அங்கு கூடிய 50க்கும் மேற்பட்ட தீரன் சின்னமலை பேரவை அமைப்பை சேர்ந்தவர்களும், நடு சாலையில் வட்டமடித்தபடி வாகனங்களில் பெரும் இரைச்சலை எழுப்பிய படி பொதுமக்களை அச்சுறுத்தினர். சங்ககிரியில் இருந்து ஈரோடு செல்வதற்காக பள்ளிபாளையம் நான்கு ரோடு வந்த மற்றொரு கொங்கு சமுதாயத்தை சேர்ந்தவர்கள், ஆபத்தான முறையில் பேருந்தின் மேலே அமர்ந்துகொண்டு கூச்சலிட்டு கொண்டு சென்றனர் . இதை கவனித்த பள்ளிபாளையம் போலீசார் வாகனத்தின் வெளியே நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரை கூறி பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். வல்வில் ஓரி மன்னன் அரசு விழா, தீரன் சின்னமலை அரசு விழா ஆகிய இரண்டு நிகழ்வும் ஒரே நாளில் நடைபெற்றதால், பள்ளிபாளையம் சுற்று வட்டார பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது