திருமாநிலையூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம்.

திருமாநிலையூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம்.

Update: 2024-08-04 14:16 GMT
திருமாநிலையூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம். சேலம் மாவட்டம், தாரமங்கலம், இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சற்குணம் என்கிற சஞ்சய் வயது 24. இவர் தற்போது கரூர் மாவட்டம், தாந்தோணி மலை, வெங்கடேஸ்வரா நகர் , முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 11.30 மணி அளவில், ராயனூரில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் திருமாநிலையூர் மர அரவை மில் அருகே வந்தபோது, கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, புன்னம் சத்திரம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன் அருண்குமார் வயது 24 என்பவர், வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், சஞ்சய் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலர் உடன் கீழே விழுந்த சஞ்சய்க்கு வலது கை, கால் மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து சற்குணம் அளித்த புகாரி்ன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Similar News