திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

Update: 2024-11-20 11:06 GMT
திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், தாளப்பட்டி அருகே உள்ள செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் வயது 75. இவர் நவம்பர் 19ஆம் தேதி காலை 8.30 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனத்திற்கு பின்னால், கரூர் மாவட்டம்,பஞ்சப்பட்டி, புதுவாடி பகுதியைச் சேர்ந்த கருப்பன் மகன் பாலகிருஷ்ணன் வயது 24 என்பவர் வேகமாக ஓட்டி வந்த 407 வேன் ராமச்சந்திரன் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் ராமச்சந்திரனுக்கு வலது கால் மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள செந்தில் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News