நாட்றம்பள்ளியில் கும்பாபிஷேக விழா

மகாகணபதி, ஸ்ரீ மாரியம்மன், நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்*

Update: 2024-11-20 10:53 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெள்ளாளனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ மாரியம்மன், நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளனூர் கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ மாரியம்மன் நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நூதன ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் மங்கள இசையுடன் திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், கணபதிஹோமம், நவகிரகஹோமம், லட்சுமி ஹோமம், விநாயகர்வழிபாடு, யாகசாலை, வாஸ்து சாந்திபூஜை, மூல மந்திரம்ஹோமம், 108 வகையான மூலிகை ஹோமம், தம்பதியர் சங்கல்பம், பூரணஹூதி, மகாதீபாரதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. அதன் பின் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து மகா அபிஷேகமும் தீபாராதனை நடைபெற்றது. இதில் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். மேலும் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News