நாமக்கல் மாவட்ட இலக்கிய அணி துணைத்தலைவர் ப. முருகேசன் விருப்ப மனு!! தாக்கல்...

நாமக்கல் மாவட்ட இலக்கிய அணி துணைத்தலைவர் ப. முருகேசன் விருப்ப மனு!! தாக்கல்...;

Update: 2025-12-21 16:02 GMT
நாமக்கல் மாவட்ட இலக்கிய அணி துணைத்தலைவர் ப. முருகேசன் ராசிபுரம் தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டிட விருப்ப மனுவை தாக்கல் செய்தார். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இடமிருந்து விருப்ப மனு பெறப்பட்டு வருகின்றன. இதற்கான விருப்பமான விநியோகத்தை கடந்த டிசம்பர் 15ம் தேதி சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பொன் குறிச்சி பகுதியை சேர்ந்த அதிமுக நாமக்கல் மாவட்ட இலக்கிய அணி துணைத்தலைவர் ப. முருகேசன் ராசிபுரம் தனி சட்டமன்ற தொகுதிக்கு விருப்பம் மனு தாக்கல் செய்தார். விருப்ப மனுவை, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், அவரிடம் மனுவை வழங்கினார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் 2016 சட்டமன்ற தேர்தலில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் நேர்காணலுக்கு அழைக்கப்பெற்று இரண்டு முறை நேர்காணலில் கலந்து கொண்டார். இரண்டு முறை மாவட்ட கவுன்சிலராகவும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ராசிபுரம் தனி தொகுதி க்கு மீண்டும் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Similar News