புதிதாக KFC உயர்தர உணவகம் திறப்பு விழா
போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ரிப்பன் கட்பன்னி திறந்து வைத்தார்.;
பெரம்பலூர் பாலக்கரை பஸ் ஸ்டாப் அருகே புதிதாக KFC உயர்தர உணவகம் திறப்பு விழா இன்று காலை இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ஆ.கலியபெருமாள் தலைமையில் நடந்தது. எம்எல்ஏ எம்.பிரபாகரன், மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள்அட்சயகோபால், ராஜேந்திரன், சிவசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். KFC கிளை நிர்வாக இயக்குனர் க.அரவிந்தன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் புதிய கிளை உணவகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாழ்த்தினார். குடும்பத்தினர்கள் சாந்தி, பாக்யா, ராம் கணேஷ், முன்னாள் எம்எல்ஏ-க்கள் துரைசாமி, ராஜ்குமார், வக்கீல் என். ராஜேந்திரன், சிவகாமம் மோட்டார்ஸ் துளசிதாசன், கார்த்திக் மற்றும் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், வேலூர் தமிழ்ச்செல்வன் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள்,உறுப்பினர்கள், தொண்டர்கள் உள்பட கட்சியின் முன்னனி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு வாழத்தினர். பொதுமக்கள் இன்று ஆர்வமுடன் கலந்து கொண்டு டிரையல் பேக் உள்ளிட்ட பல்வேறு சிக்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை வாங்கி உண்டும், பார்சல்கள் எடுத்தும் சென்றனர்.