மார்கழி முதல் ஞாயிறு: நாமக்கல்லில் இந்து சமய பேரவையினர் திருவிளக்கு ஏந்தியபடி மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலம் வந்தனர்!

மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமையை (டிசம்பர் -21) முன்னிட்டு, பெண்கள், சிறுவர், சிறுமியர் கைகளில் திருவிளக்கு ஏந்தியபடி அதிகாலை வேளையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி சென்றனர்.;

Update: 2025-12-21 17:39 GMT
நாமக்கல் இந்து சமய பேரவை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத ஞாயிற்றுக் கிழமைகளில், திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி, பெண்கள், சிறுவர், சிறுமியர் கைகளில் திருவிளக்கை ஏந்தியபடி நாமக்கல் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் வருவர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5 மணியளவில் அரங்கநாதர் கோவிலில் இருந்து கிரிவலம் துவங்கியது. அதன்பின் பழைய பேருந்து நிலையம்,பூங்கா சாலை, உழவர் சந்தை, கோட்டை சாலை, ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில், நேதாஜி சிலை, பலப்பட்டரை மாரியம்மன் கோவில் வழியாக மீண்டும் அரங்கநாதர் கோவிலை வந்தடைந்தது.பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் மற்றும் புளியோதரை பிரசாதமாக வழங்கப்பட்டது.மார்கழி மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிரிவலம் நடைப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News