125 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியில் விநாயகர் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது
ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
போடிநாயக்கனூரில் 121 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் அமைந்த வித்தக விநாயகர் திருக்கோயில் புனராருர்த்தான கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் பள்ளி ஆசிரிய ஆசிரியை மாணவ மாணவியர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப் பகுதியில் அரசு கல்வித்துறை நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த சுமார் ஆகாயத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு அமைந்துள்ள சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வித்தக விநாயகர் திருக்கோவிலில் புனராருத்தான கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆகம முறைப்படி வேள்வியாகம் வளர்க்கப்பட்டு கும்ப கலசங்கள் வேள்வியில் வைக்கப்பட்டு மூன்று நாட்கள் பூஜை நடைபெற்றது. நிறைவு நாளான இன்று காலை ஆலயத்தில் கருவறை விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. பள்ளி நிர்வாகிகள் ஆசிரியை ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது