8 மாத ஊதியத்தை வழங்க திருச்சி பாரதிதாசன் பல்க லைக்கழகத்தை வலியுறுத்தியும், விடுபட்ட பாடப்பிரிவுக ளுக்கு அரசாணை வழங்க தமிழக அரசை வலியுறுத்தியும் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ, மணிநேர விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் கடந்த 22-ந்தேதி முதல் தங்களது பணிகளை புறக்கணித்து கல் லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 15வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால் விரிவுரையாளர்கள் பணியாளர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசை பிணமாக பாவித்து பொம்மைக்கு விரி வுரையாளர்கள், பணியாளர்கள் மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து அதனிடம் கோரிக்கை மனுவினை கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது அப்போது அவர்கள் கவுரவ, மணிநேர விரிவுரை யாளர்களுக்கு ஏற்றத்தாழ் வின்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். அலுவலக பணியாளர்க ளுக்கு பல்கலைக்கழக பணியாளர்களை போலவே உயர்த்தப் பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும். 8 மாத நிலுவை ஊதியத்தையும், விடுபட்ட பாடப்பிரிவுகளுக்கு அரசாணை வழங்கக்கோரியும் பல் வேறு கோஷங்களை எழுப்பினர் கோரிக்கைகள் நிறைவேற் றப்படவில்லை என்றால் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். என தெரிவித்தனர்