ரத்த வங்கி துவக்க பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையத்தில் ரத்த வங்கி துவக்க பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-08-06 13:49 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ரத்த வங்கி துவக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: குமாரபாளையம் தலைமை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றார்கள். மருத்துவமனையில் உள்நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சை பெறுபவர்களுக்கு இரத்தத்தேவை ஏற்பட்டால், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியில் இரத்தம் வழங்க வேண்டியுள்ளது. இரத்தம் தானம் வழங்க வருபவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. திருச்செங்கோடு சென்று ரத்த தானம் செய்ய பெரும்பாலோர் விரும்புவதில்லை. ரத்தம் இல்லாததால் சிகிச்சைக்காக ஈரோடு, சேலம் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் நோயாளியின் உடல்நிலை மிகவும் மோசமடையும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் தாலுக்கா அந்தஸ்து பெற்ற குமாரபாளையம் தலைமை அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி சேமிப்பு அறை அமைக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News