மயானத்தில் தீக்குளித்த மூதாட்டி மரணம்!.

கயத்தாறு அருகே மயானத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2024-08-07 05:41 GMT
கயத்தாறு அருகே மயானத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி அழகுபாண்டி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (65). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அழகுபாண்டி இறந்து விட்டார். இதனால் பேச்சியம்மாள் தனது மகள் வெயிலாட்சி மற்றும் பேரன், பேத்தியுடன் வசித்து வந்தார். பேச்சியம்மாள் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மதியம் ஊருக்கு தெற்கே உள்ள மயானத்துக்கு சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய பேச்சியம்மாள் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். அங்கு ஆடு மேய்த்தவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த பேச்சியம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சியம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Similar News