கேர்மாளம் ஜெடேருத்ரசுவாமி கோயிலில் தேர் திருவிழா
கேர்மாளம் ஜெடேருத்ரசுவாமி கோயிலில் தேர் திருவிழா
கேர்மாளம் ஜெடேருத்ரசுவாமி கோயிலில் தேர் திருவிழா கேர்மாளம் ஜெடேருத்திர சுவாமி, கும்பேஸ்வர சுவாமி, மாதேஸ்வர சுவாமி கோயிலில் தேர் திருவிழா கடந்த வியாழக்கிழமை தீப ஆராதனையுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்தல், அழகு குத்தும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து 30 அடி உயரம் கொண்ட தேரை கோயிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவில் கடம்பூர், கேர்மாளம், தாளவாடி, ஆசனூர், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஆசனூர் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.