தலைவர் நினைவு நாளில் ஏழை,எளிய, பொது மக்களுக்கு அன்னதானம்.
தலைவர் நினைவு நாளில் ஏழை,எளிய, பொது மக்களுக்கு அன்னதானம்.
தலைவர் நினைவு நாளில் ஏழை,எளிய, பொது மக்களுக்கு அன்னதானம். தமிழக முன்னாள் முதலமைச்சர், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி மறைந்து இன்று ஆறாவது நினைவு தினம் தமிழக முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவர் முதலமைச்சராக பணியாற்றிய போது, செயலாற்றிய பல்வேறு திட்டங்களால் பயனடைந்த பொதுமக்களும், பல்வேறு சமுதாயத்தினரும், அரசியல் கட்சியினரும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் தாலுகா அலுவலகம் முன்பு முன்னாள் முதலமைச்சர் மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்தை அலங்கார மேடையில் அமைத்து, அதற்கு கரூர் மாநகர மத்திய பகுதி திமுக கட்சி நிர்வாகிகள் மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மண்டல தலைவர் கனகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, மறைந்த தங்களது தலைவருக்கு இதய அஞ்சலியை செலுத்திய பிறகு, அப்பகுதி பொது மக்களுக்கு தக்காளி சாதம்,தயிர் சாதம் வழங்கினர். இதனை பெறுவதற்கு பொதுமக்கள் வரிசையில் நின்று, தங்கள் மனம் கவர்ந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தி, உணவை பெற்று சென்றனர்.