கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா
கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பொங்கல் விழாவையொட்டி அம்மனுக்கு பால், இளநீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் விழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதனை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொங்கல் விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் மேலும் கோவில் உள் பிரகாரத்தில் உருளுதண்டம் போட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர.