தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தியவர் 3 பேர் கைது 390 கிலோ பறிமுதல்

தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தியவர் 3 பேர் கைது 390 கிலோ பறிமுதல்

Update: 2024-11-17 04:11 GMT
தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தியவர் 3 பேர் கைது 390 கிலோ பறிமுதல் சத்தி அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் இருந்து ரேஷன் அரிசி அருகே உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர்க்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருவதால் இதனை தடுக்க தாளவாடி போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தாளவாடி போலீசார் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள மகாராஜன் புரம் வன சோதனைச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த மொபட் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் இருந்த 4 சாக்கு மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அரிசியை கடத்தி வந்தவர் தாளவாடி, சேர்ந்த கலீம் செரிப் (62) மற்றும் ஆரிப் கான் (52) என்பதும் இவர்கள் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு அரிசி மொப்பாட்டில் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசி மற்றும் மொபட் வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் குருபார குண்டி நால்ரோட்டில் போலீசார் நடத்திய சோதனையில் மொபட்டில் இருந்த 2 மூட்டைகளில் 90 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த முஜிப் அகமது (44) என தெரிய வந்தது. இதையடுத்து மொபட்டையும் ரேஷன் அரிசியும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரையும், ரேஷன் அரிசி, மொபட் ஆகியவற்றை ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News