செல்போன் பயன்படுத்தும் போது விழிப்புணர்வு வேண்டும் : எஸ்பி

தூத்துக்குடியில் செல்போன் பயன்படுத்தும் போது விழிப்புணர்வு வேண்டும் : மாணவிகளுக்கு எஸ்பி அறிவுரை வழங்கினார்.

Update: 2024-08-08 02:54 GMT
செல்போன் பயன்படுத்தும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மாணவிகளுக்கு  மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  அறிவுரை வழங்கினார்.  தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  இன்று  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பேசுகையில், கல்வி கற்பதற்கு வறுமை என்பது உங்களுக்கு ஒரு தடையாக இருக்க கூடாது. மாணவிகளான நீங்கள் எப்பொழுதும் நம்மால் முடியாதது எதுவுமில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தோல்வி ஏற்படும்போது துவண்டுவிடாமல் அதிலிருந்து அனுபவத்தை கற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியே உங்களை பக்குவப்படுத்தி சிறந்த வெற்றியாளராக மாற்றும். மேலும் டாக்டர் அப்துல் கலாம்  கூறியதுபோல் ‘கனவு காணுங்கள்” என்பதற்கிணங்க நாம் என்னவாக இருக்க ஆசைப்படுகிறோமோ அப்படியே ஆகிறோம் என்பதை மனதில் வைத்து எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களை உருவாக்கி கொண்டு அதற்காக உழைக்க வேண்டும்.

Similar News