காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட தொழில்நுட்ப பொருட்கள் ஏலம் விடப்படுகிறது
ஏலம்
பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட தொலை தொடர்பு பொருட்கள் பொது ஏலம் விடப்படுகிறது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல் துறையில் தொலைத்தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்ட மின்கலன் (பேட்டரி) உள்ளிட்ட 646 பொருட்கள் 13.08.2024 அன்று பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலமானது வரும் 13.08.2024 அன்று காலை 11.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. மேற்படி பொருட்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் வரும் 13.08.2024 -ம் தேதி காலை 10.00 மணிக்கு தற்போதைய காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு சான்றிதழ் மற்றும் பேட்டரிகளை ஏலம் எடுப்பவர்கள் பேட்டரிகளை அனுமதிப்பதற்கான மாநில மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு சான்றிதழுடன் ஏல முன்வைப்பு தொகையாக ரூ.500 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவார்கள் ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குன்டான சரக்கு மற்றும் சேவை வரி சேர்த்து முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.